சூரிய குல நாயகன் ..............! (சொப்பன பலிதம் )
மறைத்தேன் பெருங்காதல் ஒன்று
==செங்கமல இதழ்கள் திறக்காது
விறைத்தேன் பனியாய் உருகியாக
==சப்தபதி காண்பேனோ சங்கடமே
நிறைத்தேன் இருளை விழிகளுள்
==குணமகன் உருவம் எண்ணியே !
தோற்றேன் அனுதினம் எனக்குள்
==சாவித்திரி விரதம் கலைக்காது
வீற்றேன் சிலையாய் சிந்தாமணியே
==வேண்டும் வரம் அருள்வாயோ ;
ஏற்றேன் காணாததாய் பெருந்துயர்
==சுமந்திரனே தேவனிடம் ஓதிவிடு !
தொழுதும் சோர்ந்திடா சாமமோ
==சலனம் ஏற்ற சந்திரோதயமாக
முழுதும் சூழும் ஏகாந்தவலையுள்
==யோசனைகந்தி நான் சிக்கினேன் ;
பழுதும் பார்க்காது அவ்வேளையும்
==திணறுதே போகபூமி வழிகேட்டு !
சிலிர்த்தான் வாதாரணி என்னுள்
==மெய்மறந்த சயனம் தன்னில்
ஒலித்ததோ தேவகானம் ஒன்று
==செவிவழிகள் தனை நிறைக்க
பலித்தேன் அம்மாயை தீண்டும்
==அர்த்தமற்ற நொடி மறுத்தேன் !
தூயவன் குரல்தனை உளத்துள்
==தெளிவாய் கேட்க எழுந்தேன்
மாயவன் கைகளிலே கொண்ட
==வைஜயந்தமோ இனிதே கமழ
நேயவனைச் சேரும் திருநாளோ
==நெருங்கி வரவே அறிந்தேன் !
*********************************************************
வைஜெயந்தம் = பூமாலை
வாதாரணி = வாயுதேவன்
யோசனைகந்தி =சத்தியவதி
சிந்தாமணி =வேண்டும் வரம் தருபவள்
சுமந்திரன் =சூரிய குல வம்சத்திற்கு மந்திரி
சப்தபதி = திருமண நாளில் யாக பீடத்தை சுற்றும் வைபவம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
