கிழவன்

உப்பா உப்பா என்று அழைத்தார்கள்
அமீர் என்று அழைத்தார்கள்
ஐயா என்று அழைத்தார்கள்

அவர் பலருக்கு பயான் செய்தார்
எல்லா ஊருக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றினார்
மக்களை அமீராக இருந்து பலமுறை வழிநடத்தினார
பலமுறை குரானுக்கு விளக்கம் சொன்னார்

வீட்டில் யாருக்கு சுகம் இல்லை என்றாலும் ஓதி ஊதி விடுவர்
குடும்பத்தில் நிகாஹ் பல நடத்தியுள்ளார்
எதிலும் எவற்றிலும் முன்னின்று நடதிவைபார்
யார் வீட்டுக்கு போனாலும் அடுக்களை வரை நுழைந்துசெல்வர்

அப்படித்தானே எங்கள் வீட்டிற்கும் ஒரு நாள் வந்தார்
உடன் ஏன் வீட்டு பெண் பட்டம்பூச்கள் அனைத்தும் பதுங்கினர்,முழி பிதுங்கினார்.

அன்று முதல் அவர் கிழவனானர்

பெற்றோரே யாரையும் நம்பாதீர்
பட்டம்பூச்களை பாதுகாப்பாய் வைத்துக்கொள்ளுங்கள்

எழுதியவர் : parveeen (10-May-13, 1:34 am)
Tanglish : kizhavan
பார்வை : 78

மேலே