நான்

கல்லைக் கரைக்கும்
கனிவு கொடுக்கும்
வல்லொற்று இல்லாத
பெயரினன் நான்-என்

மதியில் நுழைந்து
விதியை வெல்வேன்
விவேகம் மிக்க
வேகம் கொண்டு,

தொல்லை தீர்க்கும்
துணிவு கொடுக்கும்
தோல்வியே இல்லாத
வீரன் நான்-மன

வலிமை கொண்டு
பகையை ஒழிப்பேன்
வாழ்க்கை என்னும்
போர்க்களம் வென்று,

விண்ணில் எழும்
வான வில்லாய்
வளைந்து கொடுக்கும்
குணங்கொண்டவன் நான்-பிறர்

என்னில் கொடுத்த
தீங்கை அழிப்பேன்
சுட்டுப் பொசிக்கும்
சூரியன் போன்று,

மண்ணில் விழும்
மழையால் வரும்
மண் வாசனை
போன்றவன் நான்-உன்

கண்ணில் விழுந்து
இதயம் கவர்வேன்
கடைசி வரை
உன்னோடு இருந்து...

இவண்,
உங்களின் இனிய
நண்பன்,
S.M.கணேஷ்.

எழுதியவர் : S.M.கணேஷ் (10-May-13, 2:20 am)
Tanglish : naan
பார்வை : 101

மேலே