அச்சம் தவிர்,பக்குவம் பழகு !!!

விழுந்தாலும் எழமுடியும்
எனும் நம்பிக்கை
உண்டென்றால் இப்பொழுதே ஓடு!!!
****************************************************************************
மனதை மூலதனமாய்
கொண்டே மனங்களை
வெல்லும் வித்தை
அறிந்தவனா நீ?
துணிந்து காதல் செய்!!!
****************************************************************************
காமம் என்பது
பூனைக்கு,மீனின்
மேல் உள்ள
வெறி போல் இல்லாது!!!

மாறாக மலருக்கும்
வண்டுக்கும் உள்ள
உறவு என
தோன்றுகிறதா? மனைவியோடு
இப்பொழுதே மஞ்சம் புகு!!!
****************************************************************************
பக்குவம் உள்ளவன்
கையாளும் விடயங்கள்
அனைத்தும்,தேர்ந்த
அறுவை சிகிச்சை
செய்யும் மருத்துவரின்
கையில் இருக்கும்
கத்தி போன்றது!!!

பற்பல உயிர்களை
இலகுவாய் காத்திடும்
பெரும் ஆற்றல் கொண்டது!!!
****************************************************************************
பக்குவம் இல்லாதவனின்
கையாளும் விடயங்கள்
அனைத்தும், கசாப்பு
கடையில் புதிதாக
வேலைக்கு சேர்ந்த
பொடியன் கையில்
இருக்கும் கத்தி போன்றது!!!

சில வேளைகளில்
கறியையும் பல
வேளைகளில் அவனையும்
அவனே அறியாது சேதப்படுத்திவிடும்!!!
****************************************************************************
அச்சம் தவிர்,
பக்குவம் பழகு,
எதை கையாள
விரும்புகிறாயோ அதைப்பற்றி
ஆழமான அறிவுக்கொள்,
வெல்லும் சூட்சமத்தினை
தனித்தன்மையோடு,வாய்மையோடு செயற்படுத்து!!!

வெற்றி உன்
விலாசம் தேடி
வந்து வால்
ஆட்டியபடி பவ்வியமாய்
உன் பாதங்களுக்கு அடியில் அமர்ந்திருக்கும்!!!
****************************************************************************
அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (10-May-13, 2:24 am)
பார்வை : 527

மேலே