இராமநாதசுவாமி!!
இராமநாத சுவாமியை
நாமமிட்டு சேவிக்க
சேமமே நாளெல்லாம்.
ஜெயமாகும் யாவுமே!
அமைதிக்கடல் வீட்டிலே
அமைந்திருக்கும் நாதனே!
அருகிருக்க ஈழமோ!
ஆரடித்தும் வீழுமோ!!
ஓடிக்கோடி தீர்ததங்கள்
உள்ளாடி வந்திட்டோம்!
ஓடாதோ துயரங்கள்!
ஒழியாதோ பகைமைகள்!
அலையாடும் கடலையே!
அடக்கி வைத்த சாமியே!.
நிலையில்லா மனிதனை
நின்றாடச் செய்வாயோ!
ஈழமகள் சீதையையே
இலங்கனிடம் மீட்கவே
போரிடப் புறப்பட்டு--ஈசனை
பூஜித்த பூமி வாழ்கவே!
சமூககக்கவி.கொ.பெ.பிச்சையா.