தோட்டக்காரன் எங்கே ?

அது ஓர் அழகிய பூந் தோட்டம்
வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பூங்கா
மல்லிகை முல்லை ரோஜா என்று
இனிய மலர்கள் இதழ் விரித்துச் சிரிக்கும்
தென்றல் பாடும் இனிய நந்தவனம்.
அங்கே கள்ளியும் காளானும் முகிழ்த்து
களைகளும் மண்டி கிடக்கிறது
முட்புதர்களும் மலிந்து பெருகிப் போனது
நச்சுப் பாம்புகள் நெளிகின்றன
நறுந்தேன் மலர்கள் இதழ் விரியாமல்
மொட்டிலே கண்ணீர்விட்டு
தோட்டமெல்லாம் உதிர்ந்து கிடக்கின்றன
வண்டுகள் வருகையை நிறுத்தி விட்டன
சரிசெய்து நீர் தெளிக்கும்
தோட்டக்காரன் எங்கே ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-May-13, 10:26 am)
பார்வை : 132

மேலே