அவள் வீட்டு தோட்டத்தில்...!
மடலாடும் போது வந்த
டூலிப் மலர் ஒன்றை
நவீனத்தோடு கொய்துக்கொண்டேன் நான்
கொஞ்சும் சந்தனமும்
தழுவிச்செல்லும் செந்நிறமுமாக
சிரித்தது டூலிப் என்னை பார்த்து
பசுமை பின்ணனியில்
முன்னிலை வகித்து வசீகரித்தது
வஞ்சனை இல்லாமல்
நான் டூலிப்பை பார்த்தேன்
உன்னை தீட்டியது யார்...?
வண்ணமிட்டு உயிர்த்தது யார்...?
மகுடம் தாங்கும் ஆட்சி நங்கை கூட
உன் ஆளுமை போல் இல்லை
என் பணிவுகள் உன் அழகிற்காக
டூலிப் இதழ் சுழித்தது
ஏளனம் அதன் உதடுகளில் இருந்து
மனிதம் செய்யும் மாபெரும் மடமை
உன் பணிவுளில் பெண்ணே என்றது
நான் திகைத்தேன்
டூலிப் வினவியது
என்னை நானா தீட்டினேன்...?
வண்ணங்கள் கொண்டு
நானா ஒப்பனை செய்துக்கொண்டேன்...?
டூலிப் மொழிந்தது
குயவன் கைகளில்
பானை எப்படியோ...!
இயற்கையின் விரல்களில்
மலர்ந்த நானும் அப்படியே...!
வணங்குதல் அவனையே (இயற்கை) என்றும்
பணிந்து எழுக அவன்
திறமைகள் போற்றி...!
வணங்கி பணிந்தது டூலிப்மலர்