இரண்டாவது தாய்

பத்து மாதம் பக்குவமாய்
படுத்திருந்தேன் கருவறை
என்னும் சொர்க்கத்தில்

பத்து மாதம் முடிந்ததும்
பசிக்கு பால் இல்லை,
தாலாட்ட தாய் இல்லை

பகலில் என் தந்தை சூரியனாகவும்
இரவில் என் தாய் நிலவாகவும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
குப்பைத்தொட்டியில்

எல்லா குழந்தைகளும் பிறந்தவுடன்
தாய்பால் குடிக்கும்
நான் அன்றுமுதல் இன்றுவரை
தாய் பாலுக்காக ஏங்குகிறேன்

என்னை பெற்றவளே
நீ செய்த தவறுக்காக நான்
தண்டனை அனுபவிக்கிறேன்

எனக்கு தாய் இல்லை என்று
நான் வருத்தப்படவில்லை
என்னை தத்து எடுத்தவளும்
ஒரு தாய் தான்,

வருடம் வருடம் போய்க்கொண்டுதான்
இருக்கிறேன் என் தாய் என்ற
அந்த குப்பைத் தொட்டியை பார்க்க

எழுதியவர் : வே.அழகு (11-May-13, 11:27 am)
Tanglish : erandaavathu thaay
பார்வை : 106

மேலே