செவிதேடும் ..... வரலாறுகள் ...........

போப்பின் கல்லறையில்
பூத்து சிரித்தன ...
நாலும் ரெண்டுமாய் ...
நீதிப்படைப்புகள் .......
.............................................................
எழுத்துக்கள் தன்
புத்துடலுள் புகுந்து
பூரிப்பில் திளைத்தன
சதுரகராதியில் ..............
.....................................................................
மெல்ல மெல்ல ....
தமிழில் கரைந்துதான் ...
போயிருந்தன
பெஸ்கி என்ற
பெயரும் கூட.....
.........................................................................
வின்சன் ஜூலியரின்
இறகுகளில்
பாரிசில் சிறகடித்தன
சீவக சிந்தாமணி...பயணங்கள் .....
.................................................................................
பீட்டரின்
பேனா மைத்துளியில்
ஆத்திசூடி கற்று பழகியது
ஆங்கில மொழியும் ....
...............................................................................
பலமொழி கடந்து
பழமொழி சுவையில் ..
தமிழில் உருகி
கலந்திருந்தன ..
ஜென்சன் ஹர்மனின்
சிந்தனை துளிகள் ...
.............................................................................................................
பயனற்ற பழங்கதையென...
முதுமக்கள் தாழிக்குள்
முடக்கப்பட்டிருந்த
வரலாறுகள் .....
................................................................................................
பாவம்
கன்னல் தமிழின்
மெல்லினங்கள் கூட
ஆங்கிலத்துடன் அரைபட்டு
கடைசி சுவாசத்துடன்
சிக்கித் தவித்தன
ஈனதமிழனின் ...
கடைவாய்ப் பல்லிடையே.....
....................................................................................
இப்போதெல்லாம்
பெஸ்கிகளும் போப்புகளும்
பிறப்பதேயில்லை....
கறுப்புத் தோலுக்குள்
வெளுத்துகிடந்தன
சாயம் தொலைத்த
இனத்தின்
மொழிப்பற்றுகள்......
...............................................................
முதுமக்கள் தாழியின்...
முனகல் சத்தங்கள்..மட்டும் .
செவிதேடி அலைகின்றன .....
அங்கும் இங்குமாய் ....
அகதிகள் போலவே .....!

எழுதியவர் : sindha (12-May-13, 2:35 pm)
பார்வை : 114

மேலே