கதை சொல்லி

திறக்காத ஜன்னல்
கொத்தி பார்க்கும் பறவை
ஜன்னலுக்குள் ஒருவன்
சத்தமில்லா நிமிடம்
இரவு காற்று இம்சை
இடி விழுந்த சத்தம்
கொத்தும் சத்தம் நிற்க
சுற்றும் முற்றும் பார்த்தான்
கண்ணில் பட்டது
ஆளுயுர பறவை
கொத்தப் பட்ட ஜன்னல்
காணாமல் போக
ஜன்னல் இருந்த இடத்தில்
திறந்திருந்தது சவப்பெட்டி....
மூச்சு வாங்க பயந்து
ஆழ் மனம் கதறி.....
..........................................
கத்த வாய் வரவில்லை....
..............................................
..............................................
சற்று இடைவெளி விட்டு
இன்னும் இருக்கு கதை.......
என்று சொன்ன பேய்
தூங்க போனது.....!

எழுதியவர் : கவிஜி (12-May-13, 4:48 pm)
சேர்த்தது : கவிஜி
Tanglish : kathai solli
பார்வை : 87

மேலே