உறை இழந்த விலங்குகள்

நிரம்பி வழிந்த
நீர் நிலைகள் -இருந்த இடம்
நிமிர்ந்து பார்க்கும்
உயர்ந்த கட்டிடங்களாக
நீந்தித் தவழ்ந்த
விலங்குக் கூட்டம்
தாகம் தீர்க்க
நீர்த் தேடும்
ஏதிலிக் கூட்டமாய் ....
தெருக் குழாயில்
கொட்டும் நீர்க் காண
அன்னையின் பூமியை
ஆண்டுகள் கடந்து காணும்
மகனின் மனம் போல
அளவில்லா நீர் பருகிய
குளம் நினைத்து
அளவான சிறு குழாயில்
வரும் நீர் பருகும்
அவலம் காண -உன்
இதயம் அமைதி காணுதோ
மானிடா !
இயற்கை தின்னும் ஈனப் பிறவிகள்
உலவும் காலம் -இனியும் தொடரா
வேகம் கொண்டு வீழ்த்தி சாயடா !!!!

எழுதியவர் : தமிழ்முகிலன் (13-May-13, 9:03 am)
பார்வை : 259

மேலே