என்றும் புன்னகை பூப்போம்!
புதுமை புதுமை படைப்போம்!
பழமை பழமை ஒழிப்போம்!
இனிமை இனிமை சேர்ப்போம்!
என்றும் புன்னகை பூப்போம்!
இதுவல்ல இதுவல்ல வானம்
வானம் நமது மனது!
இதுவல்ல இதுவல்ல பூமி
மனதே நமது சாமி!
நல்லவனாகவும் இருப்போம்!
வல்லவனாகவும் இருப்போம்!
வாஞ்சனையோடும் இருப்போம்!
கர்ஜனையோடும் இருப்போம்!
சர்க்கரை எங்கள் பேச்சில்
சமத்துவம் எங்கள் மூச்சில் (இதுவல்ல)
மகிழ்ச்சியை தோட்டத்தில் வளர்ப்போம்!
இகழ்ச்சி செடிகளை அறுப்போம்!
சந்திரனாகவும் இருப்போம்!
எந்திரனாகவும் இருப்போம்!
இதுவரை பார்த்தது வேறு!
இனிவரும் போர்க்கணை நூறு! (இதுவல்ல)
பிறர்க்கு உதவப் பழகு!
பிடித்திடும் தரித்திரம் விலகு!
சிந்தனைவாதி உனக்கு
வாளும் வந்திடும் துணைக்கு
களைந்திடும் கெட்டவர் வேஷம்!
இந்தியா எங்கள் தேசம்! (இதுவல்ல)