வரையறைக்குள் அடங்காத வானம் தான் ...
வானம் அது ரெம்ப நீளம்
பூமி அது இன்னும் ஆழம்
தேடி ஓடி கூடி பாடி
இன்னும் புரிலடா ....
மனிதன் புது மர்ம தேசம்
மனதில் அட நூறு வாசம்
உறவும் சிறகும்
உடைஞ்சிடும் மண் சட்டி
ஒண்ணும் விளங்கலடா......
உடலுக்குள் சூடாக
உயிர் வைத்தான்.....
உண்மையில்
புதிர் வைத்தான்
அவன், இறைவன் தான்....
ஊருக்கு ஆயிரம்
கதை வைத்தான்...
வன்மையில் திகில் வைத்தான்
அவன், மனிதன் தான்....
காதல்
அது அழகியின் போதை...
காமம்
அது அழகிய போதை ...
உணவில், உயிரில்
புதிதாய் உருகும்
எரிமலை பனிக்கட்டி டா....
இன்று
ஒரு நாளின் கதை தான்...
நாளை
அது மாறும் விதி தான்...
மனம் போல் ஆட
மௌனம் ஓட
மானுடம் அழைக்குதுடா....
வரையறைக்குள் அடங்காத
வானம் தான் ...
எண்ணத்தில் போர் தொடுக்க
இவன் மனம் கரைகின்றான்....
வரைமுறைக்குள் ஒளியாத
தேகத்தில்
வானவில் வாள் சுழற்ற
இவன் தினம் மறைகின்றான் .....