ஆமைப் படைஞர்களின் முற்றுகை

ஊமைப் படையின் ஊர்வலம்
சன நாயக நாட்டினில்
ஆமைப் படையின் அவலம்
சமூக வீதிகளில்
உண்மைப் படை தூங்குது
வீதி ஓரங்களில்
வெம்மைப் படை தாக்குது
பானுவின் கோடை வெய்யிலில்
வெள்ளாமைக்கு வேதனை தரும்
கட்டிடங்கள் நில்லாமை
யார் செய்வார் ?
இல்லாமை நீக்கி இங்கு
ஏழைக்கு வாழ்வு
யார் தருவார் ?
அதோ
ஆமைகள் விரைந்து
வருகின்றன !

----கவின் சாரலன்
கவிக் குறிப்பு: தூண்டிய கவிதை பிராணிப் பிரிய
பானுவின் ஆமை.

எழுதியவர் : கவின் சாரலன் (14-May-13, 8:52 am)
பார்வை : 110

மேலே