முதலிரவு முடிந்து பின்னொரு நாளின் அதிகாலையில்

இரவெல்லாம் எனக்கென தொலைத்தாய்
உன் தூக்கத்தை
எப்போதுறங்கி எப்போதெழுந்தாயோ
தெரியவில்லை
வெண்டை விரல்களால்
எனைஎழுப்பி
தேநீர் தருகிறாய் .
ரவிக்கையை நனைக்கிறது
குளித்து தலையில் சுருட்டிய
ஈரத்துணி
நீ கோலமாவோடு புறம்சென்று
வாசலில் கோலமிடுகிறாய்
வாசலிடும் கோலத்தை விட
அழகானது
நீ கோலமிடும் கோலம் ...

எழுதியவர் : இதயதுல்லா (15-May-13, 7:38 am)
பார்வை : 132

மேலே