சதி எனும் புனிதம்

உயிரோடு உயிராக
உணர்வோடு உறவாடி
உயிர்க்காதல் கொண்டாட
விழைகிறேன்..!

காதலும் காதலர்களும்
சமூகத்தின் அகராதியில்
கெட்டவார்த்தைகளாம் !

உணர்வை மதித்தவள்
உயிரை மாய்த்தாள் !

என்னவள் மெய்தனை
எரியூட்டும் விறகாக
விழைகிறேன்..!

சதி எனும் புனிதம் தொலைத்து
எனக்கு உலை வைத்துவிட்டார்கள் !

சபிக்கிறேன்..
சதி எனும் புனிதம்
தொலைத்த சதிகாரர்களை !

_ மகா



எழுதியவர் : மகா (4-Dec-10, 1:09 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 347

மேலே