இது விவாத மேடை அல்ல...பகிர்வு மேடை

( முன் குறிப்பு;- இது விவாத மேடை அல்ல...பகிர்வு மேடை)

இப்படி இன்னும் எவ்வளவோ உங்களுக்கும் தெரிந்து நிறைய இருக்கும் அவற்றை இப்பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

1.இறை நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோருமே கோவிலுக்கு போவார்க்ள என்று நினைப்பது.

2.குழந்தை பெற்றுக்கொள்ள கல்யாணம் செய்ய வேண்டும் என நினைப்பது.

3.இரவில் உலகம் முழுதும் இருளாக இருக்கும் என நினைப்பது.

4.கல்யாணமாகிவிட்டால் தம்பதிகளுக்கிடையே காதல் இருக்குமென நினைப்பது.

5.பூனை குறுக்கே போனால் காரியம் கெட்டுவிடுமென நினைப்பது.(பூனை என்ன நினைத்ததோ?)

6.நம்மை படைத்த இறைசக்தியை தனிமனிதனாக நினைப்பது.

7.படித்தவர்களெல்லாம் புத்திசாலிகள் என்றும் படிக்காதவர்கள் முட்டாளென்றும் நினைப்பது.

8.ஆங்கிலம் என்பது வெறும் மொழி என்று உணராமல் அறிவென்று சொல்லிக்கொண்டு இருப்பது.

9.கார் ஓட்டுபவர்களை எல்லாம் அந்தக் காரின் முதலாளி என்று நினைப்பது

10.ஒரு பெண்ணுடன் கூட செல்பவனை எல்லாம் அந்தப்பெண்ணின் கணவன் என்று நினைப்பது.

11.பகுத்தறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்பவர்களை நாத்திகர்கள் என்று நினைப்பது.

12.வழிபாட்டுத்த்தலங்களுக்கு செல்பவர்கள் எல்லாருமே ஆத்திகர்கள் என்று நினைக்கப்படுவது.

இப்படி இன்னும் எவ்வளவோ உங்களுக்கும் தெரிந்து நிறைய இருக்கும் அவற்றை இப்பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

( பின் குறிப்பு;- இது விவாத மேடை அல்ல...பகிர்வு மேடை)

எழுதியவர் : mahendran.p (18-May-13, 2:05 pm)
சேர்த்தது : mahendran.p
பார்வை : 83

மேலே