ஆரவாரம் இல்லா அணிவகுப்பு

படுத்து உறங்கும் பசுமை பூமி
வெப்பம் இல்லா வெட்ட வெளி !
அழகுமிகு குன்றின் அடிவாரம்
ஆரவாரம் இல்லா அணிவகுப்பு !

வண்ணக் கொடிகள் வரிசையில்
எண்ணம் எல்லாம் வானவில்லாய் !
எட்டிய தூரத்தில் மலையின் தலை
எட்டாத உயரத்தில் வான் மேகங்கள் !

தள்ளாடி மேய்ந்திடும் வெள்ளாடுகள்
நில்லாது சுழன்றிடும் உள்ளங்கள் !
மெய்மறக்கும் உண்மைக் காட்சி
மேனியெங்கும் சிலிர்க்கும் மாட்சி !


பழனி குமார்

எழுதியவர் : பழனிகுமார் (18-May-13, 10:09 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 87

மேலே