அழு.......,

அழு.......,
கருத்த மேகம் கூட
அழுத பின்னே தான்
வெளுத்து போகிறது
அழு.......,
ஆயிரம் கைகள்
தட்டி கொடுக்கும் - ஆனால்
கண்ணீர் மட்டுமே உண்மை உரைக்கும்
அழு.......,
ஆழ் மனம்
சுத்தப்படும்....அழு
துன்பத்தை துடைக்கத்தான்
அழுகை துயரத்தை மறைக்க அல்ல
அழு.......,
தாயின் மடி இறங்கி
புமியில் முதல் மொழியே
அழுகை
அழு.......,
உன்னோடு நீ பேச
இரு துளி கண்ணீர் போதும்......,
உணர்வில் உண்மையிருப்பின்
உண்மையில் நீ அழுவாய்
அழு.......,