நினைவில் நிறுத்து

ஏ இளைஞனே!
நாள்காட்டியில், தாளை
கிழிக்கும்போது உன்
வாழ்நாளில் நாளை
கழித்துக்கொண்டே வா .

உன் வாலிப பருவத்தை
தூங்க விட்டு விடாதே
தட்டி எழுப்பு .

வயோதிகப்புயல் -உன்
பருவ வாசலை
தட்டி கொண்டே இருக்கிறது .

வீண் பேச்சு பேசி
வீணாக்காதே உயிரான காலத்தை .
வெட்டிபேச்சு பேசி காலத்தை
குட்டிசுவர் ஆக்கிவிடாதே !

ஜாலியாக இருக்க வேண்டிய
பருவமும் இதுதான் .
ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய
பருவமும் இதுதான் .

பஜாரில் நின்று பார்த்தது போதும்
பாவாடை தாவணியை .
உசாரில் நின்று உன்னை உயர்த்திக்கொள்
உன் வாழ்கையில் .

************* நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (21-May-13, 9:39 am)
Tanglish : ninaivil niruthu
பார்வை : 38

மேலே