ஆட்டமும் ஓட்டமும்!

என்ன இது வாழ்க்கையடா!
எதற்கு இங்கு வந்தோமடா!
என்ன கொண்டு வந்தோமடா!
என்ன கொண்டு போவோமடா!

சுற்றுலா மையமடா!
சொந்தமில்லை பூமியடா!
உற்றதெல்லாம் உதறியடா!
ஒரு நாளில் செல்லுமடா!

கூடி வரும் கூட்டமடா!
கூட யாரு வருவாரடா!
யாரு இங்கு சொந்தமடா!
பேரழிஞ்சும் போகுமடா!

ஐம்புல்ன்கள் தொல்லையடா!
அடங்கிவிட்டால் இல்லையடா!
வம்பு வாதம் வேண்டாமடா!
கொம்பனென்ன பட்டமடா!

ஆயுதங்கள் தேவையாடா!
ஓயும்போது உதவுமோடா!
காற்றிருந்தால் துள்ளுமடா!
காலியானால் குப்பையடா!

வயிறுணர்வு ஓட்டமடா!
கயிறிலாடும் ஆட்டமடா!
ஆட்டம் ஓட்டம் நிற்குமடா!
அடக்கமானால் மறையுமடா!

எண்ணிப்பாரு கொஞ்சமடா!
எத்தனை நாள் தஞ்சமடா!
ஒன்னுமில்லை வாழக்கையடா!
விண்ணும் மண்ணும் சிரிக்குதடா!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.












1

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (21-May-13, 12:38 pm)
பார்வை : 128

மேலே