அழகே! அமுதே! அன்பே! தமிழே!
குளத் தாமரை அழகில் மயக்கி
====பூ மல்லிகை மணத்தில் அமிழ்ந்து
நில வொளியெனும் உடையை உடுத்தி
====நளின மான் நடை நடந்து
உள மகிழ்ந்து குருதி குளிர்ந்து
====இளங் குயிலதின் குரல் எடுத்து
கல கலவென சிரிப்பை உமிழ்ந்து
====சில மலர்களின் மென்மை உணர்த்தி
மன இலைகளில் பசுமை கொடுத்து
====மீன தன்தேகமாய் உடல் அசைத்து
தன மழை உருவில் பொழிந்து
====தேன் இனிமை தமிழை எடுத்து
கன நொடியினில் செவ்வாய் திறந்து
====கான மெனுமொரு காவியம் படித்து
இனந் தெரியாவொரு இன்பத்தை கொடுத்து
====வான் மேகத்தில் மறைந்த இளநிலவாரோ?