என்ன கொடும சார் .

ஆரம்பத்தில்
தோழன் என்று
சொல்லிக்கொண்டு
தோழியின் வீட்டிற்க்குள்
காலடி எடுத்து வைக்கும்
நண்பன்
உறவு சொல்லி அழைப்பான்
அம்மா என்று
சும்மா அழைப்பான் .
சிறிது காலம் சென்றால்
தோழி காதலி ஆவாள்
காதலி மனைவி ஆவாள்
காதல் மனைவியின் அம்மாவை
அதையாக்கிவிடுவான்
காதல் கணவன் .

உறவை கூட
மாற்றும் சக்தி
இந்த பாழாய்ப்போன
காதலுக்கு மட்டுமே சாத்தியம் .
************ நம்பிக்கையுடன் சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (21-May-13, 6:21 pm)
பார்வை : 68

மேலே