கடவுளை வணங்கு

அதிகாலை கடவுளை
அன்பால் அமைதியாக
அகமகிழ்ந்து வணங்கிடு...!
ஆற்றைக் கடந்தும்
ஆயத்தமாய் விரைந்து
ஆயகலை அறிவைத் தேடு...!
இளமை முழுதும்
இளங் கதிரைப்போல
இனிமை வீசி மகிழ்ந்திடு ...!
ஈன்ற பொழுதும்
ஈயாதோருக்கும்
ஈர்ப்பு வழங்கி மறவாது
ஈகை என்றும் நாடு...!
உறவோடும்
உற்றாரோடும்
உண்டு உறங்கி
உல்லாசமாய் வாழ்ந்திடு...!
ஊரார் புகழ
ஊரோடு ஒன்றியும் என்று
ஊர் பெரியாரோடும்
ஊக்கமுடன் வாழ்ந்திடு...!
என்றும்
எப்போதும்
எளிமை வாழ்வை
எண்ணி வாழ்ந்திடு...!
ஏழைக் கண்ணீரை
ஏற்றுத் துடைத்து
ஏற்றமாய் வாழ்ந்திடு...!
ஐந்தெழுத்து மந்திரம்
ஐயமறக் கற்று
ஐயனை என்றும் மறவாதே ...!
ஒற்றுமையோடு
ஒன்றாம் மொழி என்று
ஒன்றாகப் பல கற்று
ஒரு மனம் கொண்டு வாழ்ந்திடு...!
ஓங்கி வளரும்
ஓயாத தென்னையைப்போல்
ஓருயிராய் வழங்கி வாழ்ந்திடு ...!
ஔவை போற்றும்
ஒள டதம் இன்றி
ஔவை மொழியும் கனியைப் போல் இரு...!