இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது - பஷில் ராஜபக்சே...! போர்க்குற்றத்தை சதா நினைவூட்டல் செய்து கொண்டிருக்கும் இலங்கை...?!

இலங்கைக்கு இந்தியா மிகவும் நட்பு நாடாக உள்ளது. எங்களது வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
இலங்கைக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதன்மை நாடாக இந்தியா உள்ளது.போருக்கு பிறகு நாங்கள் செய்த மறுவாழ்வு திட்டங்களை இந்தியா பாராட்டி உள்ளது.இலங்கையில் இந்திய தூதராக இருந்த அசோக் காந்தா இலங்கைக்கு தேவையான அணைத்து உதவிகளையும் சிறப்பாக செய்துள்ளார் என்று கூறியுள்ளார் பஷில் ராஜபக்சே...
மறுபுறம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அணைத்து தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்திய தூதர் அசோக் காந்தா...இலங்கைத் தமிழர் மறுவாழ்வு புனரமைப்பில் இந்திய தோல்வி அடைந்து விட்டது என்று வருத்தம் தெரிவித்து உள்ளார்...!
ஆக யார் சொல்வது உண்மை..? வெறும் நாக்கு தானே புரட்டி புரட்டி பேசிவிட்டால் யார் என்ன கேட்கப் போகிறார்கள் என்று இருக்குமோ...?
சங்கிலிக்கருப்பு