சோலைவனமாக்குவோம் பூமியை

பசுமை போர்வை போர்த்தி
பரந்திருந்த பூமி இன்று
பாலைவனம் ஆகிப்போய்
வறுத்தெடுக்க காரணம் என்ன ?

வனமெல்லாம் மரம் நிறைந்து
அடைமழை தினம் பொழிந்து
ஆறு ஏறி குலமெல்லாம்
அனையோடு நிரம்பியிருக்க ..........

இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து
இயற்க்கை வளம் பாதுகாத்து
பலம் பல பெற்று
வாழ்ந்து மடிந்தான் வன மனிதன் ............

பூமி முழுதும் குளிர்ந்திருந்து
பூக்களோடு கனி விளைந்து
வெய்யில் தெரியா உலகம் அதில்
மர நிழலிலே குடி செய்தான் ...........
**************************************************************
நாகரீகம் உலகம் தோன்றி
மரங்களெல்லாம் மாண்டு போக
குளிர்ந்திருந்த பூமி அது
கொதிக்கிறது தினம் தினம் ..........

அன்று காடுகளுக்குடையில் நாடிருக்க
இன்று நாடுகளுக்கிடையில் காடிருக்க
மக்கள் தொகை பெருத்து போச்சு
மரத்தின் தொகை குறைந்து போச்சு .......

சோலைவன பூமி இன்று
பாலைவனம் ஆகி போக
மழை வளம் குறைந்து
மண்ணெல்லாம் வெடித்து போச்சு .............

நீர் நிலைகள் வற்றிபோச்சு
நிலமெல்லாம் தரிசாய் போச்சு
வெளியே வந்தால் அனல் பறக்குது
உடல் முழுக்க தினம் எரியுது ........

இந்த நிலை தொடர்ந்து வந்தால்
நாள் நிலை என்னாவது
செய்த தவறை திருத்தி நாம்
பூமி அதை குளிர்விர்ப்போம் .............

**************************************************************
வீட்டுக்கு வீடு தோட்டம் வைப்போம்
வீதிக்கு வீதி மரம் வளர்ப்போம்
காடுகளையெல்லாம் பாதுகாப்போம்
மனைகளைஎல்லாம் விளைநிலமாக்குவோம் ......

சுற்றுபுறத்தை தூய்மை செய்வோம்
காற்று மாசுபாட்டை கட்டுபடுத்துவோம்
மழை நீரை சேமித்து வைப்போம்
மண்ணில் எங்கும் பயிர் செய்வோம் ..........

நீர் நிலைகளை பாதுக்காத்து
தூர்வாரி நீர் சேர்த்து
ஊருக்கு ஊர் புரட்சி செய்து
வறட்சியிலிருந்து மீண்டு வருவோம் .......

சோர்ந்து போன பூமி தாய்க்கு
புத்துயிரை நாமளித்து
பாலைவனம் ஆன இந்த பூமியை
சோலைவனமாக்கி சிரித்து வாழ்வோம் ............

எழுதியவர் : வினாயகமுருகன் (24-May-13, 1:57 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 172

மேலே