இரகசியம் சொல்லி கொடு !
பத்து வருட பயன்படுத்திய
சைக்கிள்
மாதம் இரண்டாயிரம் ரூபாய்
சம்பளம்
ரீகல் சொட்டு நீலத்தில் வெளுத்த
அரைக் கை பனியன்
இதுதான் அப்பா !
மாதம் பல இலட்ச ரூபாய்
சம்பளம்
ஆடம்பரமாய் ஒரு கார்
விலை மதிப்புள்ள ஆடைகள்
தினமும் இது நான் !
இத்தனை இருந்தும்
உறவுக்காரங்க மத்தியில்
நீ வாங்கிய மரியாதையும்
உன் மேல் ஊருக்கு
இருந்த அன்பு கலந்த பயமும்
என்னால் கால்வாசி கூட
சம்பாதிக்க முடியலையே !
இரகசியம் சொல்லி கொடு
அப்பா !