முன்னாள் ஆசிரியர்!

முன்னாள் ஆசிரியர்
இன்னாள் நடைவழியில்
கண்ணால் கண்டாரொரு
முன்னாள் மாணாக்கனை!

பாதையோரம் நின்றுமவன்
பார்த்துப்பார்தது புகைவிட்டான்..
ஆசிரியரைக் கண்டதும்
அணைப்பதுபோல் மறைத்திட்டான்.

ஆசிரியர் பெருமை கொண்டு
அறியாராய் சென்றிருக்கலாம்!
எந்நாளோ பயின்றவன்
இந்நாளும் மதித்தானென்று
பாராட்டி வாழ்த்திட
பக்கமவர் செல்கையில்.........

""என்ன சார் நீங்களுமா
எங்க அப்பந்தான் அப்படி!
பாத்தா புடுங்கி ஊதியிருவான்னு
பதுங்கி நின்னு புகவிட்டா
பாதி குடுனு கேக்கிறீங்கள சார்"

என்று கள்ளமில்லாமல் அவன்
நின்று சொல்லிப் புகைத்தான்!
பார்த்தும் பாராமல் விலகுவதே
காத்துக் கொள்ளும் மரியாதை!!

பாவம் அந்த ஆசிரியர்!
பாடம் சொன்னதும் பாழோ!
கூவம் மணந்தாலும் சமூக
மாற்றம் நேராதோ!


கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (24-May-13, 9:57 pm)
பார்வை : 805

சிறந்த நகைச்சுவைகள்

மேலே