மரமாகும் விருப்பம் எனக்கு

மரமாகும் விருப்பம் எனக்கு

பறவைக்கு வீடாக
பசிக்கு கனியாக
உயிர்க்கு உயிராக
நேசத்திற்கு நிழலாக
பாசத்திற்கு பசுமையாக

இப்படியெல்லாம் என் விருப்பம்

மும்மாரி மழை இல்லை

என்னை கண்டு கொள்ள ஆளில்லை

நான் உயிர்வாழ நீரில்லை

கடைசியில் விறகானேன்

விறகொடிக்க வந்தவர்கள்
தண்ணீரோடு வந்தார்கள்
அவர்களை தாகத்தை தணித்துகொள்ள

என்ன சுயநல உலகமடா????????

நான் செத்தும் விடுவதாக இல்லை.

சரி என் சந்ததிகள் பார்த்து கொள்வார்கள்
என நினைத்து நிம்மதியாய் விறகானேன்

விதைகள் என் பிள்ளைகள்
அவர்களுக்கும் பிழைப்பதற்கு நீரில்லை
வாழ இடமில்லை
வருந்த ஆளில்லை

இனியாவது உயிர் காக்கும் மரத்தை
காப்பார்களா??

எழுதியவர் : விஜிமொகனவேல் (25-May-13, 10:27 am)
பார்வை : 238

மேலே