ஒரு கேள்வி?
எங்கோ நீ அழும்பொழுது
என் விரல்கள் உன்
விழி துடைக்க துடிக்கும்
நம் தொலைவுகள் கூட கூட
நம் இடைவெளி குறையும்
நீ இல்லாத வெறுமையில்
என் பகல்கள் இருள் சூழும்
தழுவும் உன் கைகள்
தேடி என் எண்ணம்
அலைபாயும்
நழுவும் என் உயிர்
இறுதியில் உன் பெயர்
சொல்லியே மாளும் ..
ஓயாமல் ஒலிக்கும்
ஒரே கேள்வி
என்னையே கொல்லும்
பொழுதுகளில்
" என்னை நீயும் நினைத்தாயா? "