இசையில் வாழ்பவரே !
இசை உரு பெற்று - நெஞ்சில்
பசை போன்று ஒட்டிக்கொண்ட
பாடல்கள் பல தந்தவரே !
விசை போன்ற உம் பாட்டு
தசை சிலிர்க்கச் செய்யும் எம்மை !
நீ அசைந்ததால் உன் பாடல்களில்
அசைந்தது தமிழ்நாடு !
எம்மோடு ! நீர் அமர்ந்து
மெய்மறக்க ! பேசிய வார்த்தைகள்
இன்னமும் மறக்கவில்லை !
நீர் அகலவில்லை ! எம் போன்றோர் !
பலர் நெஞ்சில் அகல் விளக்காய்!
வாழ்கிறீர் உம்மை மறவா ! மாணவன்
உம்மோடு வாழ்ந்ததில் மகிழ்வடைகிறேன்