தலை நகரம் அது கொலை நகரம்
தலைநகரம் அது
கொலை நகரம்
தவறுகளாலே
வளர் நகரம்............
ஒரு பவுன் சைணுக்கு
ஒருவர் பலி
ஒரு லட்சம் பணத்திருக்கு
ஒரு குடும்பமே கொலை ............
ஆயிரம் பணத்திற்கு
கையை வெட்டுறான்
ஐம்பதாயிரம் பணத்திருக்கு
தலையை எடுக்கிறான் ..........
வீட்டை அபகரிக்க
அடியாள் மிரட்டல்
நிலத்தை திருட
ஆளே கடத்தல் ..........
பணத்தை திருட
மிளகாய் தூவல்
உடமையை திருட
கத்தி கீறல் ............
காவல் துறையும்
களவு செய்யுது
திருடிய பணத்தில்
கமிஷன் வாங்குது .............
காம பசிக்கு
கர்ப்பை திருடறான்
காதல் பசிக்கு
ஆளை கொல்லுறான் .......
நிதியை வாங்கி
மோசம் பண்ணுறான்
மக்களை ஏமாற்றி
கம்பி நீட்டுறான் ................
நகர வாழ்க்கையே
துன்பமாய் போச்சு
நாளுக்கு நாள்
தொல்லையே ஆச்சு ..........
சட்டம் ஒழுக்கு
சீர்கெட்டு போச்சு
நீதிக்கும் நேர்மைக்கும்
கண்கெட்டு போச்சு ...........