நா ரொம்ப பிஸி ..
இதுவரை வீட்டில் போறுத்தாச்சி
பொதுவில் பொய்கள் பலவாச்சி
பணம் தேடி பெத்தப்பன் பை பழகியாச்சி
கனவில் மட்டும் சொந்த வீடு கட்டியாச்சி
கட்டாயமாய் காதல் சில காலமாச்சி
இன்னும் பல
காரணம்
நேர்காணல் பல நீர்காணளாச்சி
"இன்று புதிய நிறுவனம்
இன்றைக்கே உடைத்து விடுகிறேன் உன் தேங்காயை
இயன்ற வரை உதவி செய் "
என்று வேண்டி சென்றவன்
வீடு திரும்பி சொல்கிறான்
"இங்கும் வேலை இல்லையாம்
சென்று வர சொன்னார் இன்னொரு நாள்"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
