கல்வெட்டுகள்....

கல்வெட்டுகள்....

தத்தம் பெயர்களும் செல்லப்பெயர்களும்...
இனி வரும் காலங்களில் வருவோர் கண்ணுக்கும் எட்ட...
வருங்காலத்திற்கு வாழ்த்து சொல்ல...
பிரிவின் வலியும்...எதிர்காலக் கனவுகளும்...வெற்றிச்சின்னங்களும்...
சிற்சில வாழ்வியல் தத்துவங்களையும் இங்கே காணக்கூடும்...
இன்றும்...
இன்னமும் சில காதல் காவியங்களும் தீட்டப்பட்டிருக்கலாம்...
எங்கே...
எங்கே...???
.....
கல்வெட்டுகளிலா..???
....
கல்லூரி சுவர்களிலும்... மரங்களிலும்...
படிக்கட்டுகளிலும்...தரை தளத்திலும்...
பென்சில் பேனா கொண்டு தீட்டப்பட்டாலும்...
இவை கல்வெட்டுகள் தான்...
செதுக்கப்பட்ட இடங்களில் சிதைந்து போனாலும்...
செதுக்கிய சிற்ப்பிகளின் மனதில் என்றும் புதியதாய்...
படுபத்திரமாய் பாதுகாக்கப்படுகின்றன...
வருடங்கள் பல உருண்டோடினாலும்...

எழுதியவர் : பிரதீபா chandramohan (26-May-13, 1:57 pm)
சேர்த்தது : pratheba chandramohan
பார்வை : 174

மேலே