மீண்டு வா மீசை பாரதியே..

இனப் போராட்டத்தில்
இரண்டாகப் பிரிந்தது எங்கள்
இஷ்ட தெய்வம்..

ஒற்றுமையாய் ஒரு வேற்றுமை..
சுயநலவாதிகள் சுதந்திரமாய்
மனிதாபிமானம் என்ற சடலத்தோடு
ஊர்வலம் நடத்துகின்றனர்..
வெட்கங்கெட்ட சமுதாயம்
அதை
வேடிக்கை பார்க்கும் சமதர்மம்..
மீண்டெழுந்து வா என் மீசை பாரதியே..
மீட்புப் போராட்டம் மீதமுண்டு
சமுதாயத்தை சமதர்மமாக்க..

எழுதியவர் : (28-May-13, 6:22 pm)
சேர்த்தது : B.kavitha
பார்வை : 61

மேலே