இந்த உலகமே ......

மலர்கள் மலரும்போது

நம்மை யார்சூடுவார் என்று
யோசிப்பதில்லை !
தென்றல் புறப்படும்போது நாம்
யார்மேனி தழுவப்போகிறோம்
என்று யோசிப்பதில்லை !
கடலில் அலை எழும்போது
நாம் யாரைத்தீண்டப்போகிறோம்
என்று யோசிப்பதில்லை !
நீ மட்டும் ஏன் யோசிக்கிறாய்? ,
நம்மால் என்ன சாதிக்க முடியும் என்று ?!!
தன்னம்பிக்கை , விடாமுயற்சி ,
கடின உழைப்பு .
இந்த மூன்றும் உனக்குள்ளிருக்கும் வரை ,
உன் விந்தை செயல்களை எண்ணி ,
இந்த உலகமே விடியாமல் காத்திருக்கும் .!!!!!!!!!!

எழுதியவர் : ரா.வினோத் (29-May-13, 2:43 pm)
சேர்த்தது : கவிஞர் வினோத்
Tanglish : intha ulakame
பார்வை : 97

மேலே