பள்ளியின் இறுதிப் பருவம்..

எழுதப்படாத நோட்டுக்கள்
ஆயிரம் கதை எழுதும்..
விடுமுறை நாட்களுக்கு
விடுமுறை தரும் நம் நட்பு.
மலராத மரங்களும் மலரும்
நம்மை வரவேற்க..
இலைகள் சொல்லும் இளவேனிற்காலம்
அதுவே நமது வசந்தகாலம்..
தோழியே நீ உடனிருக்க
துன்பமும் துவண்டுவிடும்
தோல்விகள் தோற்கடிக்கப்படும்
அது ஒரு கனாகாலம்
கனவாய் கரைந்து விட்ட காலம்
தோற்கவே ஆசைப்படுகிறேன்
உன் அன்பை பெறுவதிற்கு..
பள்ளிப் பருவத்தின் இறுதிப் பருவம்
கண்கள் கலங்கிய நேரம்
இதயம் இருண்டு போனது
ஆனாலும் தோற்காது நம் நட்பு..
நினைவுகள் போதுமடி
நித்தம் நான் வாழ..
உயிர் உறங்கிய பின்னும்
நான் வாழ்வேன்
உன் மனதின் வடிவில்..!

எழுதியவர் : kavitha (30-May-13, 6:13 pm)
சேர்த்தது : B.kavitha
பார்வை : 77

மேலே