நில் கவனி செல்

அண்டத்தில் சுற்றிதிரியும்
துண்டங்களை காட்டிலும்
பெரும் துண்டங்களாக கூறு போடும்
நம் நாட்டு அரசியல்வாதிகளே நில்லுங்கள்.....
வெண்ணிலவாய் உருவெடுத்து
பெண்ணிலவாய் பிறக்கும் நாளைய
தாய்மார்களை.....
வெண்துளி அமிலத்தால்
சிதைக்கும் சினம்கொண்ட நம் இன்றைய ஆண்மக்களே கவனிங்கள்....
சிறுதுளி சேர்க்கும்
பெருவெள்ளம் என்பது சான்றோர் கூற்று
பெருந்துளி சேர்ப்பதே
சிறுகுணம் இது இன்றைய பெற்றோரின் கூற்று
சீரழியும் சமூகமே சற்றே நில் கவனி செல்.......????

எழுதியவர் : மைதிலிசோபா (30-May-13, 9:29 pm)
பார்வை : 332

மேலே