நான் ஒரு குடிகாரன்தானே .....
அம்மா எங்கிறேன்
என் நெஞ்சமோ
ஈரமாகிறது
தாலாட்டை கேட்கிறேன்
என் தாய் மடியோ
தூரமாகிவிட்டது
மீண்டு ஒரு முறை
கருவறை கேட்கிறேன்
என் மண்ணறையோ
என்னை அழைக்கிறது
கிட்டவந்து பார்க்கிறேன்
நான் எப்போதோ
தூரமாகிவிட்டேன்
உலகைவிட்டு
ஏனென்று கேட்கிறேன்
என் மனம் சொல்கிறது
'நீதான் ஒரு குடிகாரன்' ஆகிற்றே என்று