வந்தா வரட்டும் ஒரு கை பார்க்கலாம்
முட்களோடு முட்டியபடி
முடிவை தேடுவதில்லை மலர்கள்
தென்றலை திரும்பிப் பார்த்து
திகட்டா வாசம் வீசுகிறது
வாழ்வது ஒரு முறை - அதில்
வருத்தம் எதற்கு கஷ்டம் பார்த்து
வந்த கஷ்டம் நமது அதிர்ஷ்டம் - இனி
வாழ்வதற்கே அது வசந்தம்