என் கணவர்
இது வேண்டும் அது வேண்டும்
என்று உன்னிடம் கேட்டதில்லை
ஏன் எனில் கேட்கும்படி நீவைக்க வில்லை
வேண்டும் என்று மனதில் நினைக்கும்
போதே அந்த பொருளை வங்கிக் கொண்டு
வந்து நிற்பாய் கரணம் அந்த அளவிற்கு
என்னை புரிந்து கொண்டுள்ளாய்
உன்கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி என்னும் பாடல் உனக்கு மட்டுமே பொருந்தும்
என் கண்ணில் நீர் வழிந்தால்
உனக்கு உதிரம் கொட்டும் என்பது உண்மையில்லை என்றாலும்
நிச்சயம் கண்ணீர் கொட்டும்
எதாவது ஒரு காரணத்திற்காக சண்டை போட்டுகொண்டு தாய் வீட்டற்கு செல்லும் பெண்களைக் கண்டால்
பொறாமையாக இருக்கிறது
நீதான் அப்படி ஒரு வாய்ப்பை எனக்கு தரவே இல்லையே
மாமியார் இன்னொரு தாய் என்று
சொன்னாலும்
அது உண்மை ஆகாது
ஆனால் கணவனே தாயக இருப்பது
எத்தனை பேருக்கு கிடைக்குமோ
தெரியாது ஆனால் எனக்கு நீ கிடைத்தாய்
ஒவ்வரு ஆணின் வெற்றிக்குப் பின்னும்
ஒரு பெண் இருப்பது உண்மை என்றால்
என் ஒவ்வரு வெற்றிக்குப் பின் இருப்பது நீ
என்னுடைய ஒவ்வொரு திறமையும்
கண்டு பிடித்து ஊக்கமளித்து என்னை ஒளிரசெய்வது நீ
என்ன சுமந்து பெற்று வளர்க்கா விட்டாலும்
எந்தன் தாய் நீ .
உன்னைப்பற்றி எழுத வார்த்தைகள் போதாது எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்
இப்படிக்கு உன் அன்பு மனைவி .