என் இதய துடிப்பின் இறுதி துடிப்பு என்னவனே உனக்காக
என்னவனே...
யாரென தெரியாதவர்களின்
திருமண அழைப்பிதழில் கண்டேன் ...
மணமகனாக உனது பெயரும்
மணமகளாக எனது பெயரும் ....
அத்திருமண அழைப்பிதழை
பத்திரப்படுத்தினேன் -நம்
காதல் நினைவாய் ....
பிரிந்த நம் காதல்
ஒன்று சேர்ந்ததாய்
உணர்தேன் என்னுளே...
கலங்கியது என் விழிகள்
என் வாழ்க்கை உன்னோடு
இல்லையென ...
என் இதய துடிப்பு
ஒவ்வொன்றும் வாழ்ந்தால்
உன்னோடு மட்டுமே ...
இல்லையேல் மண்ணோடு
மட்டுமே என துடிக்கிறது
ஒவ்வொரு நொடியும் ....
என் இதய துடிப்பின்
இறுதி துடிப்பு கூட
என்னவனே நம் காதல்
நினைவுகளையும் ,உன் பெயரையும்
உச்சரித்துக்கொண்டே உயிர் விடும்...
உன்னவளை புரிந்து கொண்டு
நீ வரும் வேளை
காத்திருப்பேன் உனக்காக ...
சுமங்கலியாக செல்ல என்
இறுதி ஊர்வலத்தில்.....
என் காதலனே உனக்காக ....
அன்றாவது மலருமா
உன் மௌன இதழ்கள் என்னக்காக ...
காத்திருப்பேன் நான் மெளனமாக ...
அழகிய மலர்மாலைகளுடன் ....
உன் கையால் தாலி
வாங்கவில்லை என்றாலும்
நீ இட்ட குங்குமம் போதும்
என் நெற்றியில் நாம்
நேசிந்த போது...
அன்றே உன் மனைவியாகி விட்டேன்
என் மனதளவில்...
இப்பிறவியில் இதுபோதும் ....
மறுபிறவி என ஒன்று
இருந்தால் உன் காதலியாகவும்
மனைவியாகவும் வாழவே
பிறவி எடுப்பேன் .....
இல்லையேல் மறித்து விடுவேன்
இப்பிறவி போலவே....