தனி மரமாய்
பிறப்பிலே ஒர் சிறப்பு அவனுக்கு
வேகத்தையும் கூட்டிகிட்டான் வெற்றி காண
இவன் தொட்ட மொட்டும் பூக்கும்
ஆனா வறுமை தான் இவன ஆளும்
வறுமை போக்க வழியில்லை
வரவளுக்கும் வறுமை தவிர விதியில்ல
வந்துட்டா வறுமையை பங்கு போட்டுக்க
பகலெல்லாம் மண்ணுகிட்ட சண்ட தான் அவனுக்கு.
இரவலெல்லாம் அவளுக்குன்னு கொஞ்சம் மிச்சம்தான்.
மிச்சத்துக்கு வந்ததும் பொம்பளபுள்ளத்தான்
இவன் வாழ்க்க வெள்ளபக்கமில்ல வண்ணபக்கந்தான்
காப்பு காய்ச்ச கையில அவள தொட்டா இளவம்பிஞ்சி கூட இதம் தராது அவங் கைகிடா
அவ வைச்ச மீன்குழம்பு எல்லாருக்கும் குழம்பு தான்
அவனுக்கு ஆனா அவ உசுரு
மண்ணுகிட்ட போட்டி போடுற அவனுக்கு
அவ குடுக்குற ஆயுதம் தூக்குசட்டிதான்
அவனுக்கு ஆயுதமில்ல அவ உசுரு
இப்படியே காலங்கழிஞ்சுது அவக வாழ்க்க
வயசாகி ஒர் உசுரு படுத்தே அவன விட்டு போச்சு
என்ன செய்ய என்ன செய்ய
இந்த உசுர வச்சிகிட்டு
மொத்தமா விட்டு போயிட்டாளே !
கூட கூப்பிடாமா போயிட்டாளே !
கண்ணுக்கு தடை போட்டு நிக்கல
கண் மூட நேரம் கொடுக்காம கண்ணீரும் நிக்கல
வரேன் வரேனு பின்னாலே போனாரு
கைபிடித்து இழுத்தது இவகளுக்கு
பிறந்த இன்னொரு உசுரு....