கிராமப் பணக்காரன் - சி.எம்.ஜேசு
எண்ணமுடியா ஜீவன்கள் இருக்கு
சொல்ல முடியா நிலங்கள் இருக்கு
கண்ணைத் திறந்தால்
கழனி ,கொல்லை, மேடென - தன்
வியர்வை விழுதுகளை
மண்ணில் பதித்து உலகமே !
உயிர்வாழ உணவு தருபவனே !
கிராமப் பணக்காரன்
அறுவடை முடிந்து
அளந்திடும் நெல்தனில்
அளவில்லாமலே உழைத்தவர்க்குத் தந்து
உறுதுணையாய் இருப்பவனே
கிராமப் பணக்காரன்
காலமெல்லாம் வியர்வை சிந்தி
கூலி போதாமல் - தன்
குலையை பட்டினி போட்டு
மகனின் விவசாய படிப்புக்கு
வலி மறந்து தன்னை பலியாய்
தருபவனும் வருங்கால
கிராமப் பணக்காரன்
ஊரார் வாழ உள்ளதை தந்து
குறையுடயோரைக் கண்டு
குறைத் தீர்த்து குணம் பார்பவனும்
கிராமப் பணக்காரன்
விழாக் காலங்களில் - தன்
ஊராரைப் போன்றே - பிற
ஊரார்களையும் நேசித்து
வரவழைத்து மகிழ்வித்து
உறவு பாராட்டுபவனே
கிராமத்துப் பணக்காரன்