இயற்க்கை - சி.எம்.ஜேசு

பொழுதுகள் புலர்ந்தும் மலர்ந்தும்
மறைந்தும் போகின்ற அழகு
விதைகள் விழுதுகளாகி
கவிதை பேசும் அழகு
பனிமலைக் காடுகள்
பால் வெள்ளை சிகரங்கள் அழகு
கொக்கரித்து புகை துப்பி
தகத் தகவென மணலை எரித்து
ஆழதினின்று அலையாய் சுழன்று
மெழுகாய் உருகிக் கருகும்
எரிமலை தூரத்தழகு
அடர்ந்து படர்ந்த பச்சை மேடுகள்
பறந்து விரிந்த மலைக் காடுகள்
நிறைந்து விரைந்து செல்லும்
வெண்ணிற மேகங்கள் யாவும் அழகு
மலைச்சரிவில் விழும் அருவி
அழகென ஓடும் ஆறுகள்
தேங்கி நிற்கும் நீர் நிறைந்த ஏரி
குளம் குட்டைகள் யாவும் அழகு
மழை அழகு மழைத் தூரல்
சாரல் துளி அழகு
நிலம் அழகு கடல் அழகு
புவியே ! நீதான் எந்தன்
முதல் அழகு