ஏழ்மை

நான் எதையுமே வித்தியாசமாக பார்ப்பவன்.
எப்படி என்று சொல்கிறேன் கேளுங்கள்...
அனைவருக்கும் அது நடை பாதை
எனக்கு மட்டும் அது குடியிருப்பு !
அனைவரும் பழையது என்று கழிப்பார்கள்
அவர்கள் கழிக்கும் பழையது எனக்கு புதியது !
அவர்கள் எனக்கு இடும் தர்மம் தலைகாக்கும்
அவர்கள் செய்யும் தர்மம் என் பசி போக்கும் !
அவர்கள் கற்ற கல்வி உயர்வை தரும்
நான் கற்காத கல்வி வாழ்வில் உயர எனக்கு ஊக்கத்தை தரும் !
அனைவரும் என்னை நாடோடி, பிச்சைக்காரன் என்பார்கள்,
அரசாங்கம் என்னை ஏழை என்று சொல்லும்,
எனக்கு மட்டுமே தெரியும் நான் இதயத்தால் உயர்ந்த வகுப்பை சேர்ந்தவன் அனால் தாழ்த்தப்பட்டவன் பொருளாதார ரீதியாக !
ஏழையாய் பிறந்தது என் தவறல்ல,
உன்னை போல் பணக்காரனாய் வாழ்வேன் என்று ஏக்கத்தோடு பிறந்தது தான் என் தவறோ ?
என்று தான் இந்த எழ்மையிடம் இருந்து விடுதலை கிடைக்குமோ இந்த ஏழைகளுக்கு !
நன்றி:செல்விபாண்டியன்