உடைந்துபோனதோ மண்பானை

சுழற்றிவிட்ட சக்கரம் நடுவே
உருட்டிவைத்த மண்உருண்டை
கொசவர்கள் கை பட்டுப்பட்டு
மண்பாண்டமென உருவம் பெற .......

சோறாக்கும் பானை
குழம்பு வைக்கும் சட்டி
வறுத்தெடுக்கும் வானால்
வக்கனையாய் உக்கார்ந்து சாப்பிட மண்தட்டு ........

விளையாட்டு பொம்மைமுதல்
அய்யனார் சிலைவரை
அழகுததும்பும் கைவேலைகள் நிறைந்த
அகல் விளக்குகள் ......

பணிந்து வணங்கும் சாமிசிலைகள்
பயம் காட்டும திருஷ்டி பொம்மை
செடி வளர்க்க மண்ணால் ஜாடி
செம்மையான மண்பாண்ட வேலைகள் ............

முன்தோன்றி மூத்த தொழில் இது
முன்னோர்கள் காத்த தொழில்
உடல் நலம் காத்துவந்த
உன்னத கைத்தொழில் ............

குயவரின் குலத்தொழில்
இது மக்கள் நலதொழில்
ஆதரவின்றி தவிக்கும்
அந்த மக்களின் பழந்தொழில் ............

புதுமைகள் வளர்ந்துவரலாம்
அதற்காக பழமையை மறந்துவிடலாமா
நாம்புழங்கிய மண்பாண்டங்களை
நம்முன்னே அழியவிடலாமா .........

காலத்திற்கும் போற்றவேண்டிய
கைவினை தொழில்அதை
கல்யாணத்தில் மட்டுமே காண்கிறோம்
இன்று வர்ணம் தீட்டிய பானைகளாய்..............

மண்ணால் தொழில்செய்தவர்கள்
மன்வீட்டோடு புழங்கிபோகிறார்கள்
ஏற்றம் என்பது வாழ்வில் இல்லாமல்
ஏக்கதோடவே மறைந்து போகிறார்கள் !

கைத்தொழிலை ஊக்குவிப்போம்
கைத்தொழிலை வாழவைப்போம்
கலங்குகின்ற குயவர்களை
கைகொடுத்து தூக்கிவிட்வோம் .............

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Jun-13, 8:41 pm)
பார்வை : 830

மேலே