தோலின் சுகம் ரத்தம் சுண்டும் வரை

நிலவென்றான் மதிஎன்றான்
நீயே கதி என்றான்......

நெருங்காதே நீஎன்றதும்
நெருஞ்சி முள் நானென்றான்....

தோலின் சுகம் தொலைத்து விட்டு
தொடர்ந்து வா எனை என்றேன்

தொலைந்து போ சனியனே
தூரம் உனக்கு காதலென்றான்......

கடையனே தொடுவதுதான்
காதலா எனக் கேட்டேன்....

கட்டாயம் அதுதானென
கயவன் அவன் சொன்னான்.....

செல்லடா இடுகாட்டுக்கு அங்கே
செத்திருக்கும் பிணங்கள் பல

தொட்டுப்பார் உணர்ந்திடுவாய்
உலகில் உண்மைக் காதல் என்னவென்று....!

சொல்லி விட்டு காதலை காத்தேன்
காதலை கொல்வதற்கே அவனும் சென்றான்.....!

எழுதியவர் : ரஞ்சிதா (4-Jun-13, 3:24 pm)
பார்வை : 141

மேலே