@@@ என் உயிரின் உணர்வே அப்பா @@@
![](https://eluthu.com/images/loading.gif)
ரணக்கும் என் மனம்
உள்ளுக்குள் தினம் தினம்
என் குணம் தெரிந்தும்
என்னை குமுறி அழவைக்காதே
என்னுள் புதைந்த அந்நிகழ்வு
அழியாமல் என்னை வதைக்கிறது
அமைதியாகும் நிலையில் கூட
என்னை போட்டு உலுக்குகிறது
என் தந்தைக்கு பிடிக்காது
வராதே என்கிறேன்
கேளாமல் வடிக்கிறது என்
கண்கள் முடிவுகள் இல்லாமல்
தண்ணீர் குளத்தில் தாமரை கூட
முக்கால்பாகம் மூழ்கி முகம் காட்டும்
முழுதாய் மூழ்கி போகிறேன்
என்னுடைய கண்ணீர் குளத்தில்
அந்த நான்கு பேரும் என்னிடமிருந்து
உன் உடலை பிரித்திருக்கலாம்
ஆனால் யாரால் முடியும் என்
உணர்வில் வாழும் உன்னை பிரிக்க
உணர்வில்லாமல் பிரேதமாய்
சிதையில் உனக்கிட்ட தீ வலிக்காமல்
உனக்கு இருந்திருக்கலாம் ஒவ்வெரு
நிமிடமும் வலிக்கிறது என்னுள்
அப்பா உணர்வுகளை உள்ளடக்க
கற்றுக்கொண்ட எனக்கு உன்
நினைவுகளில் வழியும் கண்ணீரை
அடக்க தெரியவில்லை கற்றுக்கொடு
காலங்கள் எத்துனை கடந்தாலும்
என் உள்ளத்துக்கும்
வெளிவரும் கண்ணீருக்கும்
பதில் சொல்ல தெரியாத
அவலநிலையில் நானிங்கு ..
... கவியாழினிசரண்யா ...