தேவதைகள் மட்டுமா....
அரிதாரம்
பூச வேண்டாம்..,
சொந்த அழகு போதும்
இந்த மனதை வீழ்த்த...
தெருக்கள் முழுவதும்
தேவதைகள்...
அவர்கள் மட்டுமா?
அங்கொன்றும்
இங்கொன்றுமாய் அரக்கிகளும்....
காதல் விதிகள்
முரண்படுகிறது..,
தேவதைகள்
முரட்டுத்தனமாக,
அரக்கிகள் மென்மையாக....
யுகங்கள்
பல சுழன்று வந்தும்
சற்றும் குறையவில்லை
நாசி துளைக்கிறது
ஆதாம் முகர்ந்த அதே வாசனை....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
